கிழக்கு லண்டனில் உள்ள பரபரப்பான வீதியொன்றில் வைத்து கத்தியால் குத்தப்பட்ட பஸ் சாரதி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் ஸ்டெப்னி, கமர்ஷியல் வீதிக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.
அதன்போது, முதுகில் கத்தியால் குத்தப்பட்ட காயத்துடன் 40 வயதுடைய ஒருவரை மீட்ட பொலிஸார், அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
“அந்த நபர், கிழக்கு லண்டன்வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்த பெருநகர காவல்துறை செய்தித் தொடர்பாளர், “பஸ் சாரதியின் காயங்கள் உயிருக்கு ஆபத்தாக இல்லை என மதிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.
இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.