0
கம்போடியாவில் உள்ள இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (1 ) மாலை நேர்ந்த இந்த தீ விபத்தில் 4 ஆண்களும் 2 பெண்களும் உயிரிழந்தனர்.
சில மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா என்பது தெரியவில்லை.
சம்பவம் குறித்து விசாரணை நடப்பதாக கம்போடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.