இங்கிலாந்து அமைச்சரவையில் திடீர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அமைச்சரவையில் இருந்து பலரை வெளியேற்றியுள்ள பிரதமர் ரிஷி சுனக், சிலரை உள்ளீர்த்துள்ளார்.
அதன்படி, முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன், இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சராக ஏழு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அமைச்சரவைக்குத் திரும்பியுள்ளார்.
பதவிநீக்கம் செய்யப்பட்டவர்கள்
ஆளுங்கட்சியில் இருந்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்த சுவெல்லா பிரேவர்மேன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், வீட்டுவசதித்துறை அமைச்சரான ரேச்சல் மெக்லீனும் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய அமைச்சரவை விவரம்
புதிய அமைச்சரவையின் படி, இங்கிலாந்து உள்துறைச் செயலராக பதவி வகித்துவந்த சுவெல்லா பிரேவர்மேனுக்கு பதிலாக வெளியுறவுத்துறைச் செயலராக பதவி வகித்துவந்த ஜேம்ஸ் கிளெவர்லி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜேம்ஸ் கிளெவர்லி வகித்துவந்த வெளியுறவுத்துறைச் செயலாளர் பதவி, முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமப்புற விவகாரங்கள் துறை சுகாதாரத்துறைச் செயலராக பதவி வகித்துவந்த ஸ்டீவ் பார்க்ளேக்கு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமப்புற விவகாரங்கள் துறை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறைச் செயலராக பதவி வகித்துவந்த ஸ்டீவ் பார்க்ளேக்கு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமப்புற விவகாரங்கள் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதால், அவர் வகித்துவந்த சுகாதாரத்துறை விக்டோரியா அட்கின்ஸ் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.