பிரேஸிலுக்கு அடுத்தபடியாக உலகின் மிகப் பெரிய சீனி ஏற்றுமதி நாடு தாய்லாந்து ஆகும்.
தாய்லாந்து அரசாங்கம் உள்நாட்டு சீனி விற்பனை விலையை 10 சதவீதம் உயர்த்த அனுமதி வழங்கியிருக்கிறது.
இது உலகளாவிய ரீதியில் சீனி விலையை உயர்த்திவிடக் கூடுமென்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வறட்சியால் கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, கரும்பு விவசாயிகளுக்கு ஏற்படும் கூடுதல் செலவைச் சமாளிக்கும் நோக்கில், சர்க்கரை விலை உயர்வை அனுமதித்ததாக தாய்லாந்து தெரிவித்தது.
இந்த ஆண்டு தாய்லாந்து சீனி உற்பத்தி 8 மில்லியன் டன்னாகக் குறையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் 2.5 மில்லியன் டன் தாய்லாந்து உள்நாட்டில் பயன்படுத்திக்கொள்ளப்படும்.
எஞ்சிய 5.5 மில்லியன் டன் ஏற்றுமதி செய்யப்படும் என தாய்லாந்து தெரிவித்தது.