அமேசான் மழைக்காட்டில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
சுமார் 14 வருடங்களுக்குப் பின்னர் இவ்வாறான பாரிய காட்டுத்தீ பரவல் சம்பவம் பதிவாகியுள்ளது.
கடும் வறட்சியால் அந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கடந்த மாதம் காட்டுத்தீ ஏற்பட்ட 38,000க்கும் மேற்பட்ட பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த 2023ஆம் ஆண்டை விட அது இரு மடங்கு அதிகமாகும்.
வானிலை, பருவநிலை மாற்றம், மனிதர்களின் நடவடிக்கைகள் ஆகியவை கூடுதலான காட்டுத்தீச் சம்பவங்களுக்குக் காரணம் என்று சுற்றுப்புறப் பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
“அமேசான் மழைக்காடு” தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள ஒரு பெரிய மழைக்காடு ஆகும்.
இதன் பரப்பளவு 07 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இதில் காடு மட்டும் 5.5 மில்லியன் ச.கி.மீ ஆகும்.
இது பிரேஸில் (ஏறத்தாழ 60 சதவீத மழைக்காட்டினை உள்ளடக்கியது), கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்வெடார், கயானா, பொலிவியா, சுரிநாம் மற்றும் பிரெஞ்சு கயானா ஆகிய 09 நாடுகளில் பரவியுள்ளது.