புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஐரோப்பா 24 மணித்தியாலத்தில் பிரிட்டனின் நிலவரம்.

24 மணித்தியாலத்தில் பிரிட்டனின் நிலவரம்.

1 minutes read

உலக இணையம் புள்ளிவிபரங்களை வெளியிட்டின்  படி  பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் +627 இறப்புகள் பதிவாகி உள்ளதாக, கொரோனா வைரஸ் தொற்று அனர்த்தம் குறித்து,

நேற்றைய தினம் +268 ஆக பதிவாகிய இறப்புகள், இன்று மீண்டும் பாரிய அளவில் 359ஆல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பிரிட்டனின் மொத்த மரணங்கள், 32,692 ஆக உயர்ந்துள்ளன. அத்துடன் புதிதாக அடையாளம் காணப்பட்ட +3,403 தொற்றாளர்களுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 226,463 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, ஸ்பெயினில் +176 இறப்புகளும், ரஷ்யாவில் +107 இறப்புகளும், ஜேர்மனியில் 76 இறப்புகளும், மறுபுறம் மெக்ஸிக்கோவில் +108 இறப்புகளும் பதிவாகி உள்ளன.

ஆரம்பத்தில் அதிகளவிலான இழப்புகளை தாங்கிய இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் தொடர்ந்தும் 200க்கு உட்பட்டவாறு இறப்புகளை கட்டுப்பாட்டுள் வைத்திருக்க பிரிட்டன் இறப்புகள் மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளன. இந்த நாடுகளில் முடக்க கட்டுப்பாடுகளில் தளர்வுகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமெரிக்காவின் மொத்த இறப்புகள் 82 ஆயிரத்தைக் கடந்து 82,063 ஆக உயர்ந்துள்ளன. தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,389,696 ஆக உயர்ந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More