பிரிட்டனில் 6 பேரில் ஒருவர் வறுமையில் வாழ்வதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. பெரும்பாலான குடும்பங்கள் உணவு வங்கிகளை நாடியுள்ளன. மேலும் சிலர் உணவுதானத்தை நம்பியுள்ளனர்.
உயரும் எரிபொருள் விலையால் வசதிகுறைந்த குடும்பங்கள் கூடுதல் நெருக்கடியை எதிர்நோக்குவதாக அண்மைய ஆய்வொன்று குறிப்பிட்டுள்ளது.
அத்தகையோரை உணவு விலையேற்றம் பெரிதும் பாதித்துள்ளது. எரிபொருள் விலை உயர்வைச் சமாளிக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் சுமார் 500 டொலர் வழங்க அந்நாட்டு அரசாங்கம் உறுதியளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் ஆண்டு அடிப்படையிலான எரிபொருள் கட்டணம் சுமார் 1,000 டொலர் உயரக்கூடும் என்பதால் அந்த நிதியுதவி போதுமானதாக இருக்காது என்ற கவலையும் நிலவுகிறது.