சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அரச மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அவர் முற்றிலும் குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே பெங்களூரு சிறை நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தபடி சசிகலா இன்று விடுதலை செய்யப்படுவதாகவும், இதற்கு கர்நாடக பொலிஸ் துறை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இதையடுத்து சிறை அதிகாரிகள் காலை 11 மணி அளவில் விக்டோரியா மருத்துவமனையில் சசிகலாவை சந்திக்கிறார்கள். அவரிடம் விடுதலை செய்வதற்கான ஆவணங்களில் கையெழுத்து பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து உணவு இடைவேளைக்கு பிறகு சசிகலாவை முறைப்படி சிறை நிர்வாகம் விடுதலை செய்யும் என்று கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.