0
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) டெல்லி செல்லவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசவுள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதன்போது தமிழக அரசின் பல்வேறு திட்டங்களைத் ஆரம்பித்து வைப்பதற்காக பிரதமருக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி செல்லும் முதல்வருடன் அமைச்சா்களும், உயரதிகாரிகளும் செல்ல உள்ளனா்.