செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா பாரிஸ் ஒப்பந்த உறுதி மொழியை இந்தியா மாத்திரமே கடைப்பிடிக்கிறது!

பாரிஸ் ஒப்பந்த உறுதி மொழியை இந்தியா மாத்திரமே கடைப்பிடிக்கிறது!

1 minutes read

பாரிஸ் ஒப்பந்தத்தில் அளித்த உறுதிமொழியை, ‘ஜி-20’ அமைப்பில் இந்தியா மட்டுமே கடைப்பிடிக்கிறது என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

மாநிலங்களவை கேள்வி நேரத்தின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “புதுப்பிக்க கூடிய எரிசக்தி, வாகன புகையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசை குறைப்பது, காடுகளின் நிலப்பரப்பை அதிகரிப்பது உட்பட பாரிஸ் ஒப்பந்தத்தில், பல்வேறு உறுதிமொழிகளை ஜி-20 நாடுகள் அறிவித்துள்ளன.

அந்த உறுதிமொழிகளை, இந்தியா மட்டுமே சரியாக கடைப்பிடித்து வருகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் மரங்கள் உள்ள நிலப் பரப்பு, நாடு முழுவதும் 15 ஆயிரம் சதுர கி.மீ.இ அதிகரித்துள்ளது.

எதிர்வரும் ஆண்டுகளில் இதன் வேகம் மேலும் அதிகரிக்கும். காடுகளின் நிலப்பரப்பை அதிகரிப்பதற்காக, மாநில அரசுகளுக்கு, 48 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு கடந்தாண்டு வழங்கியுள்ளது.

காடுகளின் பரப்பை அதிகரிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More