சென்னை: தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன் அதிகரித்து வழங்குக என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். கொரோனா பெருந்தொற்றை தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு துணை நிற்கும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கும்படி பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 11.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. கொரோனா தொற்றை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவைக் கூட்டம் கூடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் 10ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் மக்கள் பாதிக்காத வண்ணம் பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள இன்றும், நாளையும் அனைத்து கடைகளும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.