இது குறித்து சமூகவலைத்தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள காணொலியில், ‘முகக் கவசம் அணியாமல் செல்வது, கூட்டமாக செல்வது வேதனை தருகிறது.
குறிப்பிட்ட சில இடங்களில் கூட்டம் சேருவது கண்டறியப்பட்டால் அந்த பகுதியை மூடும் நடவடிக்கையை எடுக்கலாம் என மாவட்ட ஆட்சியர்களை அறிவுறுத்தியுள்ளேன்.
கூட்டமாக கூடுவதன் மூலமாக கொரோனா பரவலுக்கு மக்களே காரணமாகி விடக்கூடாது என மீண்டும், மீண்டும் வலியுறுத்துகிறேன். மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்திக்காதீர்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.