0
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக செல்லும் சரக்கு போக்குவரத்தை தலிபான்கள் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யமுடியாத நிலை எழுந்துள்ளதாக இந்திய ஏற்றுமதி நிறுவன கூட்டமைப்பின் தலைமை இயக்குனர் அஜய் சகாய் தெரிவித்துள்ளார்.
தலிபான்களின் இந்த நடவடிக்கை காரணமாக ஆப்கானில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.