ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் எழுப்பியிருந்த நிலையில், இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதன்போதே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் முழுவதும் மற்றும் லடாக் ஆகியவை எப்போதும் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒருங்கிணைந்த பகுதிகள் எனவும் இதில் பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீர் பகுதிகள் சிலவும் அடங்கி இருப்பதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளை விட்டு பாகிஸ்தான் வெளியேற வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.