புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா அகத்தியர் மலை புனிதப் பயணம்: ஜன. 6ம் தேதி முன்பதிவு தொடங்குகிறது!

அகத்தியர் மலை புனிதப் பயணம்: ஜன. 6ம் தேதி முன்பதிவு தொடங்குகிறது!

2 minutes read

திருவனந்தபுரம்: இந்த வருடத்திற்கான அகத்தியர் மலை புனித பயணத்திற்கான ஆன்லைன் முன்பதிவு வரும் 6ம் தேதி தொடங்குகிறது. 2 டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்தவர்கள் அல்லது ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்று உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். நெல்லை மாவட்டம், பாபநாசம் மலைக்கு மேல் முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில், பொதிகை மலையின் உச்சியில் கடல் மட்டத்திலிருந்து 6,132 அடி உயரத்தில் அகத்தியர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு புனிதப்பயணம் செல்ல வருடந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த வனப்பகுதி கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 2009ம் ஆண்டு வரை தமிழக எல்லை வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் இதன் பின்னர் தமிழகம் வழியாக இங்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக திருவனந்தபுரத்தில் உள்ள வன உயிரின காப்பக அலுவலத்தில் முன்பதிவு செய்து. திருவனந்தபுரம் அருகே உள்ள போணக்காடு வழியாகத் தான் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திருவனந்தபுரம் சென்று முன்பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தது.

இதன்பின்னர் ஆன்லைன் முன்பதிவு வசதி தொடங்கப்பட்டது. இதன் காரணமாக இருந்த இடத்திலிருந்தே அகத்தியர் மலைக்கு செல்ல முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த வசதியை பயன்படுத்தி தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருடந்தோறும் இங்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் இவ்வருடம் அகத்தியர் மலைக்கு பக்தர்களை ஜனவரி 14 முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு வரும் 6ம் தேதி தொடங்குகிறது. புனிதப் பயணம் செல்ல விரும்புவர்கள் கேரள வனத்துறையின் www.forest.kerala.gov.in அல்லது serviceonline.gov.in/trekking என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஜனவரி 6ம் தேதி காலை 11 மணிக்கு முன்பதிவு தொடங்கும். ஒரு நபருக்கு கட்டணம் ரூ1331 ஆகும். ஒரு குழுவில் அதிகபட்சமாக 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 14 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது. பெண்களுக்கு அனுமதி உண்டு. ஒரு நாளில் அதிகபட்சமாக 100 பேர் மட்டுமே செல்ல முடியும். 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் அல்லது 72 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

பூஜை பொருட்கள், பிளாஸ்டிக், மது மற்றும் போதைப் பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது. முன்பதிவு செய்பவர்கள் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து குறிப்பிட்ட நாளில் புகைப்படத்துடன் கூடிய ஒரிஜினல் அடையாள அட்டையுடன் திருவனந்தபுரம் அருகே விதுரா போணக்காட்டில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு காலை 7 மணிக்குள் செல்ல வேண்டும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More