கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள், அவர்களது படகுகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியே இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 800 இற்கும் அதிகமான படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.