இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் மதக்கொடி எரிக்கப்பட்டதால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு அது கலவரமாக மாறியுள்ளது.
ஜாம்ஷெட்பூரில் உள்ள சாஸ்திரி நகர் பகுதியில் ஒரு பிரிவினரின் மதக்கொடி எரிக்கப்பட்டதாக இரு தரப்பினரிடையே மோதல் ஆரம்பித்தது.
தொடர்ந்து இரு பிரிவினரும் மாறி மாறி கற்களால் தாக்கிக் கொண்டதுடன், கடைகளுக்கும், வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.
இதனைடுத்து, பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுப்படுத்தினர்.
அத்துடன், அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பாதுகாப்பு பணிகளுக்காக ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.