விண்வெளியில் செயற்கைக் கோள்களை தாக்கி அழிக்கும் ஆயுதத்தை ரஷ்யா சோதனை செய்ததாக, அமெரிக்காவும் பிரிட்டனும் குற்றம்சாட்டியுள்ளன.
ஆக்கபூர்வ நோக்கங்களுக்காக மட்டுமே விண்வெளியை பயன்படுத்துவது என அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா உள்ளிட்ட 100 நாடுகள் உடன்பாடு செய்துகொண்டுள்ளன.
இந்நிலையில், சிறப்புக் கருவி மூலம், தங்கள் நாட்டு செயற்கைக்கோள்களை மிக அருகில் சென்று பரிசோதிக்கும் செயல்முறை கடந்த ஜூலை 15ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருந்தது.
ஆனால், விண்வெளியில் செயற்கைக் கோள்களை தாக்கி அழிக்கும் ஆயுதத்தை ரஷ்யா சோதனை செய்ததாக, அமெரிக்காவும் பிரிட்டனும் குற்றம்சாட்டியுள்ளன.
தங்களுடைய மற்றும் கூட்டணி நாடுகளின் செயற்கைக்கோள்களை அச்சுறுத்தும் ஆயுதங்களை பயன்படுத்துவதே ரஷ்யாவின் உள்நோக்கம் என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. ரஷ்யாவின் இதுபோன்ற செயல்கள், விண்வெளியில் சிதைகூளங்கள் வடிவில் கழிவுகளை உருவாக்கும் என்று பிரிட்டன் குற்றம்சாட்டியுள்ளது.