பிரித்தானியாவுக்கு சட்ட விரோத புலம்பெயர்வோருக்கு எதிரான புதிய கட்டுப்பாடுகள் குறித்த திட்டங்களை பிரித்தானிய உள்துறைச் செயலள் சுவெல்லா பிரேவர்மேன், இன்று (06) வெளியிட இருக்கிறார்.
இதன்படி, சட்டவிரோமாக குடியேறியவர்கள் இங்கிலாந்தில் இருந்து அகற்றப்படுவார்கள். அத்துடன், எதிர்காலத்தில் மீண்டும் இங்கிலாந்துக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படுவார்கள். அவர்களால் புதிய சட்டத்தின் கீழ் பிரிட்டிஷ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியாது.
மேலும், சிறுபடகுகளில் பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்ட விரோத புலம்பெயர்வோரின் புகலிடக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாது.
அதற்கு பதில், அவர்கள் உடனடியாக ருவாண்டா அல்லது பாதுகாப்பான மற்றொரு நாட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.
மேலதிக விவரங்கள் அரசாங்கத்தால் இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது