கன்னியா ஆக்கிரமிப்பால் தமிழ் இளைஞர்கள் மீண்டும் தனிமைப் படுகிறார்கள் என்பதை சம்பந்தன் ஐயா ரணிலுக்கும் சிங்கள தலைமைகளுக்கும் உணர்த்தவேண்டிய கடைசி சந்தர்பம் உருவாகியுள்ளது. சம்பந்தன் ஐயா உறுதியாகவும் உரத்தும் உடனடியாகவும் குரல்கொடுக்க வேண்டும்.
.
தமிழரையும் முஸ்லிம்களையும் பிழவுப்படுத்திக் கிழக்கை கைபற்ற முனையும் சிங்கள புத்த இனவாதிகள் ஒருபோதும் வெல்லப்போவதில்லை. இலங்கையின் இறைஆண்மையை அழிக்கும் ஒரு போராட்டத்திலேயே பெளத்த பிக்குகள் ஈடுபட்டிருக்கிறார்கள். சிங்கள பவுத்த இனவாதிகள் தொடர்ந்து இரண்டுதடவை அதிஸ்ட்ட வெற்றிவாய்ப்பைப் பெற வாய்ப்பில்லை.
.
இலங்கையின் புத்த பிக்குகளும் இனவாத தொல்பொருட் திணைக்களமும் கன்னியாவை தமிழரிடம் திரும்ப கையளிக்காவிட்டால் சிறிலங்கா நம் தாய்நாடு எனும் கருதுகோள் தமிழரைப் பொறுத்து எஞ்சியுள்ள அர்த்தத்தையும் இழந்துவிடும்.
.
1987ல் இந்தியாவுடனும் 2006ல் மேற்க்குநாடுகளுடனும் முரண்பட்டதன்மூலம் தமிழர்கள் தவறுவிட்டுவிட்டதாக புத்த பிக்குகள் நிரூபிக்க முனைகிறார்கள். இலங்கை அரசும் புத்த பிக்குகளின் முயற்ச்சியை ஆதரிக்கிறதா?
பிற நாட்டுகளின் உதவியுடன்தான் கன்னியாவையும் பிள்ளையார் கோவிலையும் மீட்க்க முடியும் என்கிற கையறு நிலைக்குள் ரணில் அரசு தமிழரை தள்ளிவிடக்கூடாது. கின்னியாவா இலங்கையா என்பதை சிங்கள ஆழும் சமூகங்கள் முடிவு எடுக்க வேண்டும் என்பதை சம்பந்தன் ஐயாவும் கூட்டமைப்பும் உறுதியாகவும் உடனடியாகவும் ரணில் அரசிடம் தெரிவிக்கவேண்டும். தமிழர்கள் இரண்டுதடவை துரதிஸ்ட்ட தோல்வியை பெற வாய்ப்பில்லை.
கவிஞர் வ.ஐச. ஜெயபாலன்