கிளிநொச்சியில் 16 வயது சிறுமி ஒருவர் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி வட்டக்கச்சி கட்சன் வீதியை சேர்ந்த நான்கு இளைஞர்களால் நேற்றறையதினம் கடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக் கடத்தல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை இந்த சிறுமி தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் காவல்துறைக்கு அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.