சஹ்ரானுடன் நுவரேலிய மற்றும் ஹம்பாந்தோட்டை முகாம்களில் ஆயுத பயிற்சி பெற்ற மேலும் மூவர் அம்பாறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இலங்கையில் தடை செய்யப்பட்ட ஜமாதே மில்லது இப்ராஹிம் (JMI) அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கெலிஓய பகுதியை சேர்ந்த மொஹமட் செய்புல்லா ஹக் எனும் அபூ சஹீட் என்பவராவார்.
குறித்த நபர் நுவரோலியாவில் இடம்பெற்ற சஹ்ரானின் கருத்தருங்களில் கலந்து கொண்டவர் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மாவனெல்ல, வல்பொலதெனிய பகுதியை முஸ்தாக் அலி அம்ஹர் எனும் அபூ ஹிந்த என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சஹ்ரானின் ஹம்பாந்தோட்டை கருத்தருங்களில் கலந்து கொண்டவர் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கைது செய்யப்பட்ட மூன்றாவது நபர் மொஹமது தாஹிர் ஹிதாயதுல்லா எனும் அபூ குராமி என்பவராவார்.
குறித்த நபர் நுவரோலியாவில் இடம்பெற்ற சஹ்ரானின் கருத்தருங்களில் கலந்து கொண்டவர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்தேக நபர் மாவனெல்ல பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் ஒலுவில் பல்கலைகழகத்தின் மாணவன் என தெரிவிக்கப்படுகின்றது.