அகில இலங்கைத் தமிழ்த்தினப் போட்டியில் விவாத நிகழ்ச்சியில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி முதலிடம் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளது.
அகில இலங்கைத் தமிழ்த்தினப் போட்டிகளில் இயல் சார்ந்த போட்டிகள் இன்று 08.09.2019 இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.
கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியில் மாணவர்களான வேல்நம்பி சதுசிகன், டிலோன்ரத்னா டேவிற் லிவிங்ஸ்ரன், ரமேஸ் ஆதித்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
விவாதப் போட்டிக்கான பொறுப்பாசிரியராக ஆசிரியர் சிங்கராஜா செந்தூரன் செயற்பட்டிருந்தார்.
ஆசிரியர் சி. செந்தூரனின் வழிகாட்டலில் கல்லூரி மாணவர்கள் வில்லுப்பாட்டு (நான்கு தடவைகள்), நாட்டார் இசை (இரண்டு தடவைகள்) ஆகிய போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்றிருந்தனர்.
விவாதப் போட்டியில் பரி யோவான் கல்லூரி சாதிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவை மாணவச் செல்வங்களும் வழிப்படுத்திய ஆசிரியரும் இணைந்து நனவாக்கியிருப்பதாகவும் தனது வாழ்த்துக்களை பகிர்ந்து பெருமை கொண்டுள்ளார் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபரும் பிரபல பேச்சாளருமான லலீசன்.
இதேவேளை இசை மற்றும் நடனம் சார்ந்த போட்டிகள் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளன.
தொகுப்பு வணக்கம் லண்டனுக்காக பூங்குன்றன்