ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷக்கள் எவர் வந்தாலும் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாவதை எவராலும் தடுக்க முடியாது என்று குறிப்பிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன ரணிலை பிரதமர் ஆக்கிய எங்களுக்கு சஜித்தை ஜனாதிபதியாக்குவது பெரிய காரியமல்ல என்று தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனதிபதி வேட்பாளர் சஜித் அவர்களை வரவேற்கும் கூட்டம் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் அழுத்தக்கடை பிரதேசத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது அதில் உரையாற்றிய போதே இதனை குறிப்பிட்டார்.
அம்பாந்தோட்டையை பிறப்பிடமாக கொண்டாலும் கொழும்பில் ஆதிக்கம் கொண்ட,மக்கள் மத்தியில் நன்மதிப்பை கொண்ட ஒரு தலைவர் சஜித் பிரேமதாச மட்டுமே. ரணசிங்க பிரேமதாச நாட்டுக்கு செய்ய நினைத்த அபிவிருத்திகள் மிகுதியை சஜித் செய்வதற்கு முன்வந்துள்ளார் அவருக்கு உங்களின் ஆதரவினை வழங்க வேண்டும்.
நாங்கள் நாட்டிற்கு செய்யும் அபிவிருத்தி மக்களுக்கு தெரிவதில்லை நாங்கள் அதனை விளம்பரப்படுத்தவும் விரும்புவதில்லை, மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்படுகிறோம்.எண்களின் ஆட்சியில் மக்கள் பயம் இன்றி அரசாங்கத்தின் மீது சந்தேகம் இன்றி வாழ்கின்றனர்.
எங்கள் ஆட்சியில் வெள்ளை வேன் கலாச்சாரம் இல்லை மக்கள் அதை கண்டு பயப்பட தேவை இல்லை, ஊடக சுதந்திரம் எங்கே போனது ராஜபக்ஷவின் ஆட்சியில் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டார், சிரச நிறுவனம் தீ வைக்கப்பட்டது இதெல்லாம் செய்தது பற்றி மக்களுக்கு தெரியும் நாட்டின் எதிர் காலத்தை பற்றி சிந்தித்து மக்கள் ஸ்தீரமான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்.
கோதாபய தன்னை ஒரு அப்பாவி என்று மக்களிடத்தில் தெரிவிக்கிறார் மக்களுக்கு தெரியும் யார் அப்பாவி யார் நல்லவன் என்று வெறும் வாய் வார்த்தகளில் மட்டும் ஒருவரை நல்லவனாக காட்ட முடியாது.
சுகாதாரம் பற்றிய கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்ட கோதாபய அங்கு பாதுகாப்பு பற்றி பேசுகிறார் சுகாதார துறை வைத்தியர்களுக்கு பாதுகாப்பு பற்றிய உரை எதற்கு அவர்கள் சுகாதார துறையை சேர்ந்தவர்கள் அவர்களுக்கு தேவை சுகாதாரம் சார்ந்த அபிவிருத்தி ஆனால் கோத்தாபயவுக்கு பாதுகாப்பு பற்றி மட்டுமே தெரியும் ஒரு துறை சார்ந்த அறிவை வைத்து கொண்டு நாட்டின் ஜனாதிபதியாவது என்பது சாத்தியமானதல்ல என அவர் இதன்போது தெரிவித்தார்.