கிளிநொச்சி மாவட்டத்தின் சிறந்த விவசாயிகள் பண்ணையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு இன்று21-01-2020 ) நடைபெற்றுள்ளதுகிளிநொச்சி மாவட்டத்தில் வடக்கு மாகான விவசாமும் கமநல சேவைகளும் கால் நடை அபிவிருத்தி நீர்ப்பாசனம் மீன் பிடி நீர் வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சினால் வருடாந்தம் விவசாயிகள் பண்ணையாளர்களிடையே நடாத்தப்படும் போட்டிகளில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 368 பேருக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இன்று பகல் 10.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட கூட்டறவு சபை மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகான விவசாய பணிப்பாளர் அற்புதச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பரிசில்களை வழங்கிவைத்தார் குறித்த நிகழ்வில் விவசாய திணைக்கள அதிகாரிகள் விவசாயிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.