1
விடுதலைப்புலிகளின் இருபத்தொன்பது ஆவணங்கள் மற்றும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஐந்து ரப்பர் முத்திரைகள் , ஒரு மெமரிக் காட் ,ஒரு பென் ரைவ் ஆகியவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
கிளிநொச்சி இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் இணைந்து நடத்திய தேடுதலின் போதே கிளிநொச்சி விவேகானந்த நகர் கிழக்கில் உள்ள வீடொன்றில் இருந்து மேற்கண்ட சான்றுப் பொருட்களுடன் அதே பகுதியை சேர்ந்த 37 வயதான சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட இறப்பர் முத்திரைகள் இராணுவப் புலனாய்வு அலுவலகம் வவுனியா, மனித உரிமை ஆணைக்குழு வவுனியா , மாவட்ட நீதிமன்று கிளிநொச்சி, பிரதேச செயலாளர் கரைச்சி கிளிநொச்சி , பிரதேச செயலாளர் வவுனியா ஆகியவையே மீட்கப்பட்டதாக அறியமுடிகிறது.
சந்தேக நபர் மற்றும் சான்றுப் பொருட்களையும் விசேட அதிரடிப்படையினர் சற்றுமுன் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர். மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.