இன்று முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கொழும்பு மற்றும் சிலாபம் மறைமாவட்டங்களில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் ஞாயிறு ஆராதனைகளை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தவக்காலத்தில் விசேட யாத்திரை நிகழ்வுகளை நிறுத்துவதன் ஊடாக, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஊடக சந்திப்பொன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போதே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.