தற்போதைய கொரோனா தொற்று நிலை தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
நிலைமை மோசமடைந்தால் மீண்டும் அனைத்து பாடசாலை, பிரிவெனாக்கள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களுக்கும் மீண்டும் விடுமுறை வழங்கி அனைவரது சுகாதார பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரதேசமட்ட நிலைமை தொடர்பில் அறிக்கையிடுவதற்கு விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதி கல்விப் பணிப்பாளரின் தலைமையின் கீழ், இந்த நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், 1988 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து பாடசாலை அதிபர்கள், கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்ட கல்விச் சேவை அதிகாரிகள் தாம் சேவையாற்றும் பிரதேசங்கள் தொடர்பில் தகவல்களை வழங்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.