யாழ் இந்திய துணைத் தூதரகம், இந்தியாவின் 74வது சுதந்திரநாள் நிகழ்வைமுன்னிட்டு நேற்று (15) காலை பலாலியில் அமைந்துள்ள இந்தியஅமைதிகாக்கும் படையினரின் நினைவிடத்தில், யாழ் இந்தியத் துணைத்தூதுவர்பாலச்சந்திரனும் யாழ்ப்பாணப் பாதுகாப்புபடைகளின் கட்டளைத்தளபதி சார்பில்மேஜர் ஜெனரல் பெர்னான்டோ அவர்களும் இணைந்து மலரஞ்சலி செலுத்தி
வணங்கினர்.
நிகழ்வின் தொடர்ச்சியாக, யாழ் இந்தியத் தூதரக வளாகத்தில்,இந்தியத்துணைத்தூதுவர் அவர்கள் கொடியேற்றிவைத்து இந்தியக் குடியரசுத் தலைவரின்செய்தியை வாசித்தார்.
நிகழ்வில், இந்தியத் துணைத்தூதுவர் அவர்கள், இந்திய அரசின் ஆத்மனிர்பர் பாரத் (தற்சார்புஇந்தியா) திட்டம் பற்றியும் அதனது முக்கிய
விடயப்பரப்புகள் குறித்தும் உரையாற்றினார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, திருமதி வாசஸ்பதி அவர்கள் தலைமையிலானதூதரகத்தின் இந்தியா கார்னரின் இசை வகுப்பின் மாணவர்கள் மற்றும் எல்லைபாதுகாப்பு படைகளின் குழுவினர் நாட்டுப்பக்தி பாடல்களைப் பாடினர்.
நிறைவாக,தூதரக வளாகத்தில் இலங்கையின் தேசிய மரமான நாக மரம் (மெசுவாஃபெரியாஇலங்கை இரும்பு மரம்) துணைத் தூதுவர் பாலச்சந்திரனால் நடவு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் துணைத் தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பஉறுப்பினர்கள், இந்திய குடிமக்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்,இந்தியாவின் நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட சுமார் 100 பேர்
பங்கேற்றனர்.
கொவிட்19 நிலைமை காரணமாக, உள்ளூர் சுகாதார வழிகாட்டுதல்களை மதித்து சுதந்திர நாள் கொண்டாடப்பட்டது. சுதந்திர நாளை முன்னிட்டு தூதரகம் மற்றும் யாழ்ப்பாண கலாச்சார மைய வளாகங்கள் மூவண்ண விளக்குகளால் ஒளிர வைக்கப்பட்டன.