இரணைமடு குளத்தின் இரண்டு வான் கதவுகள் 6 அங்குலங்களில் திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
குளத்திற்கு அதிக நீர் வருகை காணப்பட்டுள்ள நிலையில் குறித்த வான் கதவுகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு 6 அங்குலங்களில் திறந்து விடப்பட்டுள்ளன.
எனினும் எந்தத் பாதிப்பும் இல்லை எனவும் ஆனால், மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.
அதனைத் தொடர்ந்து மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மக்கள் அவதானமாக செயற்படுமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை கனகாம்பிகைக்குளம், அக்கராயன்குளம் மற்றும் பிரமந்தனாறு குளம் உள்ளிட்டவை வான் பாய்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.