படுகொலை செய்த இராணுவச் சிப்பாய்களை விடுதலை செய்யும் இந்த அரசாங்கம் ஏன் அரசியல் ரீதியாக பழி வாங்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவில்ல பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வி
கிளிநொச்சி கட்ட காடு பகுதியில் இன்றைய தினம் மக்கள் சந்திப்பு மற்றும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது அதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்
இலங்கையிலே தமிழ் அரசியல் கைதிகளாக இருக்கின்ற எங்களுடைய முன்னாள் போராளிகள் பலரை இலங்கை அரசு விடுவிப்பதில் அசமத்துவ போக்கை கடைப்பிடித்து வருகின்றது.
குறிப்பாக கொரோனா காலத்திலேயே பாரியளவில் அனைத்து அரசியல் கைதிகளும் பாதிப்படைந்திருக்கிறார்கள்.
பலருக்கு கொரோனா நோய் இருப்பது உறுதிபடுத்தப்பட்டு பலர் கந்தகாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.சிலர் வெலிக்கடை சிறைச்சாலைக்குறிய சில பகுதிகளிலே வைத்து அவர்களுக்கான மருத்துவ செயற்பாடுகள் இடம்பெறுவதாக நாங்கள் அறிகின்றோம்.
ஆனால் பல நாடுகளிலே அரசியல் கைதிகள், அங்கு இருக்கின்ற ஏனைய அரசியல்வாதிகளுக்கு நோய் வருகின்ற போது அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் ஏன் இலங்கையில் கூட ஏனைய குற்றங்களை இழைத்த 6 ஆயிரம் ற்கு மேற்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்து இருக்கிறார்கள்.
இதனைவிட மிருசுவில் படுகொலை தொடர்பான இராணுவ சிப்பாய் விடுவிக்கப் பட்டிருக்கிறார் அத்துடன் ரவிராஜ் கொலை சம்பந்தமான இராணுவச் சிப்பாய் விடுவிக்கப் பட்டிருக்கிறார் ஆனால் ஓர் அரசியல் ரீதியாக பலி வாங்கப்பட்ட கைதிகள் இன்றும் அடைக்கப்பட்டு இருக்கின்றார்கள்.
இலங்கை அரசாங்கம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக எழுதி இருக்கின்ற ” கைதிகளும் மனிதர்கள் ” என்ற வாசகத்தை முதலிலே வெளியில் எடுக்க வேண்டும் அவர்களை இந்த அரசாங்கம் மனிதர்களாக மதித்திருந்தால் அந்தந்த கைதிகளும் மனிதர்கள்தான் என்பதை ஏற்றுக்கொண்டு அவர்களை விடுதலை செய்து இருக்க வேண்டும்.
அந்த விடுதலையை இந்த அரசாங்கம் நிராகரித்து இருப்பது மனித குலத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் ஓர் எதிரான செயற்பாடும் இப்போது இருக்கின்ற இந்த சிங்கள பௌத்த அரசினுடைய இனவழி செயற்பாட்டை அடையாளப்படுத்துகின்றன ஒன்றாகவும் இது காணப்படுகின்றது எனத் தெரிவித்தார்.