புதிய அரசமைப்பு ஒன்றின் நகலைத் தயாரிப்பதற்காக கோட்டாபய ராஜபக்ஷ அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் நிபுணர் குழு இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்திக்கிறது.
இந்த சந்திப்பு இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்குக் கொழும்பில் இடம்பெறவுள்ளது.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் (புளொட்) ஆகியோர் பங்குபற்றுவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது .
மேலும் இந்தக் குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான யோசனைத் திட்டத்தைச் சமர்ப்பித்திருந்தது.
இதேநேரம், புதிய அரசமைப்புக்கான தனது நகல் வரைவை இந்த ஆண்டு இறுதிக்கு முன் சமர்ப்பிக்கும் எனக் குறித்த குழு கூறியுள்ளமையும் குறிப்பிடதக்கது .