நாட்டிலுள்ள அனைத்து தேசிய பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் மீண்டும் திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக சுகாதார அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.
இவ்வாறு திறக்கப்படும் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.