காணாமல்போனோரின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதாக இருந்தால், அதற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, காணாமல் போனோர் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அலுவலகம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், காணாமல்போனோரின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதாக இருந்தால், அதற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை எனத் தெரிவித்தார்.
ஆனால், காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் அலுவலகத்தை நீண்டகாலத்திற்கு கொண்டு செல்ல முடியாது எனவும் அதனை இரத்து செய்ய நேரிடும் எனவும் அவர் மேலும் கூறினார்.