யாழ்ப்பாணம்- திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்திலுள்ள பாரதிபுரம் தவிர்ந்த ஏனைய பகுதி, கண்காணிப்பு வலயத்திலிருந்து எதிர்வரும் காலை 6 மணி முதல் விலக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொதடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம், பதினான்கு நாட்களாக கண்காணிப்பு வலயத்துக்குள் உட்படுத்தப்பட்டு, பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 88 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகவே பாரதிபுரத்தை தவிர்ந்த ஏனைய பகுதிகளை எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி முதல், கண்காணிப்பு வலயத்திலிருந்து விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது” என ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.