புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை புதிய கட்டுப்பாடுகள் குறித்த விவரம்!

புதிய கட்டுப்பாடுகள் குறித்த விவரம்!

1 minutes read

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டல்கள் அங்கிய சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய,

​கொரோனா தொற்று அல்லாமல் மரணிப்போரின் இறுதிக்கிரியைகள் 24 மணிநேரத்துக்குள் செய்யவேண்டும்.

இறுதிக்கிரியைகளில் 25 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள், மறு அறிவித்தல் வரையிலும் மூடப்படும்.

வெசாக், றமழான் ​பெருநாள்களை வீட்டிலிருந்தே கொண்டாட வேண்டும்.

ஹோட்டல்களில் கூட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களை நடத்துவதற்கு அனுமதி கிடையாது.

அரச ஊழியர்கள், பொதுநிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் வருகைத்தரவேண்டும்.

தனியார்துறை ஊழியர்கள் குறைந்தளவானோர் அலுவலகத்துக்கு சமூகமளிக்க வேண்டும்.

பொது போக்குவரத்து சேவைகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக மாத்திரமே பயணிகளை ஏற்றிச்செல்லவேண்டும்.

மாநாடு, கருத்தரங்கு, கூட்டங்கள், பகல்போசன விருந்துபசாரம், மே.21 வரை தடைச்செய்யப்பட்டுள்ளன.

அங்காடிகள், மொத்த வர்த்த நிலையங்கள், நிதி நிறுவனங்கள், புடவை கடைகள், சில்லறை கடைகளில், மொத்த நுகர்வோரின் எண்ணிக்கை 25 சதவீதத்துக்குள் மட்டுப்படுத்தவேண்டும்.

மத வழிபாட்டு இடங்களில் பொதுமக்கள் ஒன்றுக்கூட முடியாது.

கைதிகளை பார்வையிட முடியாது.

நீதிமன்றத்தில் முழு கொள்ளளவு 25 சதவீதத்துக்கு இருக்கவேண்டும். மக்கள் வருகைதரமுடியும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More