புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கடுமையான உழைப்பின் மூலம் விரைவில் மீண்டெழுவோம்!

கடுமையான உழைப்பின் மூலம் விரைவில் மீண்டெழுவோம்!

2 minutes read

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 13 மாவட்டங்களில் 60க்கும் மேற்பட்ட கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க கொழும்பு, நுவரெலியா, திருகோணமலை மாவட்டங்களிலும் பல பகுதிகள் நேற்று முதல் தனிமைப்படுத்தலுக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டை முழுமையாக முடக்கும் அவசியமில்லை என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ள இராணுவத் தளபதி, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்களது பூரண ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவும் பிரதேசங்களில் தேவைக்கேற்ப தனி மைப்படுத்தலுக்கான முடக்கம் மேற்கொள்ளப்படும் என்றும்,அதேவேளை சுகாதார வழிமுறைகளை மீறி செயற்படு வோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத் துறையினர் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், கடுமையான உழைப்பின் மூலம் விரைவில்கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்சி பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தல பொலிஸ் நிர்வாகப் பிரதேசம் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் அன்புவழிபுரம் மற்றும் வோர்ஸ்கில் உள்ளிட்ட மூன்று கிராம சேவகர் உத்தியொகத்தர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பாணந்துறை தெறகு பிரதேசத்தில் வளான வடக்கு, வேகடவடக்கு, கிரிபேரிய மற்றும் மாளமுல்ல கிழக்கு கிராம சேவகர்பிரிவுகள் ஆகியன நேற்றுக்காலை முதல் முடக்கப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக நுவரெலியா மாவட்டத்தில் நீலதண்டாஹின்ன கிராம சேவகர் பிரவும் நேற்றை தினம் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார். அதற்கிணங்க கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் 7 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், மொனராகல மாவட்டத்தில் 6 கிராம சேவகர்பிரிவுகளும், அம்பாறை மாவட்டத்தில் 4 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், மாத்தளை மாவட்டத்தில் 7 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் கா மாவட்டத்தில் 4 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் பொலன்னறுலை மாவட்டத்தில் 3 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் கம்பஹா மாவட்டத்தில் 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் களுத்துறை மாவட்டத்தில் 16 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் திருகோணமலை மாவட்டத்தில் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் குருநாகல் மாவட்டத்தில் 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் இரத்தினபுரி மாவட்டத்தில் கலவான பொலிஸ் பிரதேசத்தில் ஹப்புகொட கிராம உத்தியோகத்தர் பிரிவும் நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை பொலிஸ் நிர்வாகப் பிரிவில் நீலதண்டாஹின்ன கிராம சேவகர் பிரிவும் இதுவரை தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More