சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து ஜூலை 19 மற்றும் 20 திகதிகளில் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்படும் முதலாவது நம்பிக்கையில்லாத் தீர்மானம் இது என்பது குறிப்பிடத்தக்கது.