உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிமின் இஸ்லாமிய அடிப்படைவாத வகுப்புகளுக்கு சென்று உறுதிமொழி வழங்கிய சந்தேகத்தில் ஒருவரை பயங்கரவாத விசாரணை பிரிவு கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில், பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிமின் இஸ்லாமிய அடிப்படைவாத வகுப்புகளுக்குச் சென்று உறுதிமொழிகளை வழங்கிய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாரம்மல பகுதியை சேர்ந்த 24 வயதுடைய மொஹமட் ஷியாம் என்ற இந்த சந்தேக நபர் 2018 மற்றும் 2019 ஆகிய வருடங்களில் இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களின் போதனை வகுப்புகளுக்கு சென்றுள்ளார். பயங்கரவாதி ஸஹ்ரானின் அடிப்படைவாத வகுப்புகளுக்கு சென்ற 14 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து பயங்கரவாத விசாரணை பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாரம்மல பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பேச்சாளர் தெரிவித்தார்.