இருதரப்பு நலன்கள் சார்ந்த பல்வேறு பகுதிகளில் பிரேசிலுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்துவதற்காக இலங்கை வலுவான உறுதிப்பாட்டுடன் இருப்பதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தியடைந்து வரும் பிரேசிலிய சந்தையில் இலங்கை ஏற்றுமதிப் பொருட்களுக்கான அதிகரித்த அணுகலை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நாடியுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான பிரேசில் தூதுவர் செர்ஜியோ லூயிஸ் கேன்ஸ்ட் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் நீண்டகால அணிசேரா பாரம்பரியத்தின் பின்னணியில் பிரேசில் மற்றும் முழுமையான தெற்கு மற்றும் மத்திய அமெரிக்கப் பிராந்தியத்துடன் வலுவான உறவுகளைப் புதுப்பிக்க அமைச்சர் தனது ஆர்வத்தைத் தெரிவித்தார்.