இந்நிலையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக கடிதம் ஒன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சபை நடவடிக்கைகளை நேற்று (திங்கட்கிழமை) எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் புறக்கணித்த நிலையில் 3 மணி நேரம் மட்டுமே நாடாளுமன்ற அமர்வு நீடித்திருந்தது.
கடந்த வாரம் நாடாளுமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்ற இரண்டு தாக்குதல் முயற்சி சம்பவங்களை அடுத்து தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சி ஊர்ப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.