0
மகாவலி கங்கையில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த அனர்த்தம் நேற்று(16) பிற்பகல் இடம்பெற்றதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பளை – கல்வேல பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.