நாளாந்தம் விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் 60 வீதமானவற்றை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு விநியோகிக்குமாறு COPE குழு பரிந்துரைந்துள்ளது.
லிட்ரோ நிறுவனத்திற்கு இந்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேலும் இரண்டு கப்பல்கள் எதிர்வரும் 02 வாரங்களில் நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓமனிலிருந்து இந்த கப்பல்கள் நாட்டிற்கு வருகை தரவுள்ளன.
3500 மெட்ரிக் தொன் எரிவாயு அவற்றில் உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார்.
எரிவாயு சிலிண்டர்களை இன்று இறக்கும் பட்சத்தில், நாளை முதல் 80,000 சிலிண்டர்கள் வீதம் சந்தைகளுக்கு விநியோகிக்க எதிர்பார்ப்பதாகவும் லிட்ரோ நிறுவன தலைவர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார்.