USAID எனப்படுகின்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா பவர், இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்கும் விதம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இலங்கை மக்களின் நம்பிக்கையை வெற்றிகொள்ளும் நோக்கில், அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புகள் துரிதப்படுத்தப்பட வேண்டுமென இதன்போது அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த கடினமான காலகட்டத்தில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, G7 நாடுகள் மற்றும் ஏனைய உதவி வழங்கும் தரப்பினருடன் நெருங்கி செயற்படுவதாக USAID நிர்வாகி சமந்தா பவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.