சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடன் நேற்று (07) மாலை கலந்துரையாடிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க
சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழு மட்டத்திலான குழு விரைவில் இலங்கைக்கு வருமாறும், இதன் மூலம் பணிக்குழு மட்ட ஒப்பந்தத்தை நிறைவு செய்ய முடியும் என பிரதமர் இதன் போது கேட்டுக்கொண்டார்.
நிதி தொடர்பான பேச்சுவார்த்தைகள் இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதிய பணிக்குழு மட்டத்திலான ஒப்பந்தத்தை நிறைவு செய்யும் மட்டத்தில் உள்ளதாக பிரதமர் இதன்போது விளக்கினார்.
இந்த நெருக்கடி மிக்க காலத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க விரும்புவதாக, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளதாக, பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.