விதை நெல் உற்பத்திக்காக விவசாயிகளுக்கு தேவையான 2022 மெட்ரிக் தொன் இரசாயன உரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மகாவலி வலயத்திற்குட்பட்ட 9 மாகாணங்களிலும் விதை நெல் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள 6,774.3 ஹெக்டேர் விவசாய காணிக்கு உரம் வழங்கப்படவுள்ளது.
2022 ஆம் ஆண்டிற்கான சிறுபோக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இரசாயன உரம் கிடைக்காமையால் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.
அதற்கமைய, 2022 / 2023 ஆண்டிற்கான பெரும்போகத்திற்கு தேவையான தரமான விதை நெல்லை பெற்றுக்கொள்வதற்காக, இரசாயன உரத்தை விரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விவசாய திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதனிடையே, இம்முறை சிறுபோகத்தில் விதை நெல் உற்பத்திக்கு தேவையான 1,47,000 பூசல் விதை நெல்லை தற்போது தனியார் துறையினர் ஊடாக விவசாயிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.