நான்கு வருட காலப்பகுதிக்காக 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவான கடன் வசதியை இலங்கைக்கு வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியம் ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கடந்த 24 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்திருந்ததுடன், இன்றுடன் அவர்களின் விஜயம் நிறைவிற்கு வந்தது.
இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் Masahiro Nozaki, முழுமையான கடன் தொகை நான்கு வருடங்களில் தவணை முறையில் வழங்கி முடிக்கப்படும் என குறிப்பிட்டார்.