இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, சுங்க களஞ்சியத்திற்கு திங்கட்கிழமை (10) விஜயம் செய்த போது, சுங்கத்தால் கைப்பற்றப்பட்ட சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை பார்வையிட்டார்.
2015ஆம் ஆண்டு முதல் மொத்தம் 446 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வாகனங்களை விற்பனை செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என சியம்பலாபிட்டியவை மேற்கோள்காட்டி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு மிகவும் நெருக்கடியான நிலையில் (SF) இந்த வாகனங்களை அழிக்க அனுமதிப்பது குற்றமாகும் என்று அமைச்சர் கூறினார்.