அளுத்கமை, மொரகொல்ல பிரதேசத்தில் 23 வயதான யுவதியை கார் ஒன்றில் கடத்திச் சென்று வீடொன்றில் தடுத்து வைத்திருந்த இரண்டு பேரை தாம் கைது செய்துள்ளதாக அளுத்கமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளது. அளுத்கமை மற்றும் மொரகொல்ல ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
காதல் தோல்வியால் ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக சந்தேக நபர்கள் யுவதியை கடத்திச் சென்றுள்ளனர். கடத்திச் செல்லப்பட்ட யுவதி தென்னஹேன யக்வத்த பிரதேசத்தில் வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதனையடுத்து அவரை சினவத்த வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கடத்தல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். சம்பவம் தொடர்பாக அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.