வாவியில் சவாரியின் போது படகு கவிழ்ந்ததில் மூன்று சிறுமிகள் காணாமல்போயுள்ளனர்.
சூரியவெவ – மஹாவெலிகடஆர வாவியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது படகில் 8 பேர் பயணித்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
படகில் பயணம் செய்த 8 மாதக் குழந்தை உட்பட 5 பேர் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காணாமல்போன மூன்று சிறுமிகளைத் தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
18, 17 மற்றும் 10 வயதுடைய சிறுமிகளே இவ்வாறு காணாமல்போயுள்ளனர்.
இவர்கள் குருநாகல் பிரதேசத்தில் வசிப்பவர்கள் என்றும், உறவினர் நிகழ்வு ஒன்றுக்காக இந்தப் பகுதிக்கு வந்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் சிறிய படகில் 8 பேர் பயணித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
அப்போது வாவியின் நடுவே படகு கவிழ்ந்தது என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.